Wednesday, 14 September 2016

TEMPLE PHOTO GALLERY / புகைப்படத்தொகுப்பு

IMPORTANT EVENTS / முக்கியமான நிகழ்வுகள்

2010 – Temple Kumbhabhishekam was conducted after reconstruction.
11-09-2016..Completion of 6th year after Kumbhabhishekam was performed.  


HOW TO REACH PADIRI / பாதிரி கிராமம் வந்து சேர,

The Village Padiri may be reached  through bus
  1. 208, 104A, 104B Chennai to Vandavasi, get down at Ramapuram, from there Padiri is about 2 KM
  2. Thanapal Bus service ( Kanchipuram to Elappaakkam) and V.M. Bus ( Chengalpattu to Achiruppaakkam ) get down at Kizhamur  and from there Village Padiri is about 2 KM.
  3. 104G, 77A Chennai to Elappaakkam get down at Padiri it self.

பாதிரி கிராமம் வந்து சேர, பஸ்மார்க்கமாக… 
  1. 208, 104, 104, சென்னை to  வந்தவாசி, இறங்கும் இடம் ராமாபுரம்.
  2. தனபால் பஸ் சர்வீஸ் காஞ்சிபுரம்  to எலப்பாக்கம்.. இறங்குமிடம் கீழாமூர்
  3. V.M.  பஸ் செங்கல்பட்டு  to  அச்சிறுப்பாக்கம் இறங்குமிடம் கீழாமூர்.
  4. 104, 77A,  சென்னை  to எலப்பாக்கம் இறங்குமிடம் பாதிரி.

LOCATION OF THE VILLAGE AND TEMPLE /  கோவில் கூகுல் மேப்பில் 

--- OM SHIVAYA NAMA---

CONTACT US & TEMPLE TIMINGS

CONTACT US / அணுக
The temple is run by the trust formed for the maintenance of the temple. The present trustees are Mr Palanivel ( Mobile number +918939547464) and Mr Seran, President to Pansayath Board ( mobile number 9444470469).


ஸ்ரீ கைலசநாதர் திருக்கோவில் திரு  பழனிவேல் ( கைபேசி +918939547464) மற்றும் திரு சேரன் ( கைபேசி 9444470469)) ஆகிய இருவராலும் பராமரிப்பும் திணசரி பூசைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் நாடு அரசு HR&CE துறையைச்சார்ந்த்து.


 e-mail address: arulmigukailasanathar@gmail.com

THE TEMPLE TIMINGS / கோவில் தரிசன நேரங்கள்
The temple is kept open between 07.00 Hrs to 10,00 Hrs and 17.00 Hrs to 20.00 Hrs.


ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில் பக்தர்களின் தரிசனத்திற்க்காக காலை 07.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையும் திறந்து இருக்கும். 
--- OM SHIVAYA NAMA---

Friday, 9 September 2016

MAHA KUMBHABHISHEKAM 2010

MAHA KUMBHABHISHEKAM  / மகா கும்பாபிஷேகம் –             22-08-2010

The Temple was constructed during Chozha period.  The santum was constructed with brick.  The inscriptions are at the base of the sanctum, which are removed during the recent renovations. The front mandapam and the sanctums are now constructed with concrete. The villagers are taking effort to  preserve the same. The moolavar and the Nandhi are very old. The old Vinayagar statue is also kept in front of the temple. After reconstruction the kumbhabhishekam was performed  on 22nd August 2010.


இந்த பழமை வாய்ந்த  சோழர் கால கோவில் காலப்போக்கில் மிகவும் சிதிலமடைந்து விட்டதால், இவ்வூர் சிவநேய செல்வர்களும் பொதுமக்களும் சேர்ந்து ஸ்ரீ கைலாசநாதர் திருப்பணிக்குழு அமைத்து, மறைமலை நகர் நமசிவாய சபாவுடன் இணைந்து பெரு முயர்ச்சியால் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விக்ருதி ஆண்டு ஆவணி மாதம் 22-08-2010 ஞாயிற்றுக்கிழமை சுக்ல திரியோதசி, உத்ராட நட்சத்திரம் நேத்ரம் 2 ஜீவந்1, அமிர்தயோகம் கூடிய நன்னாளில் காலை ஒன்பது மணிக்குமேல் 9.45 மணிக்குல் கன்யா லக்கனத்தில் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீஸ்ரீ ஆண்டவன் ஸ்வாமிகள் ஆகிய்ய்ரின் அருளாசியுடன். சென்னை மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரமம் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சங்கரானந்தா சரஸ்வதி அவர்களின் முன்னிலையில் ஆன்மீக சான்றோர்கள், வேதியர்கள் பங்கேற்போடு மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது..
 --- OM SHIVAYA NAMA---

Thursday, 8 September 2016

THE TEMPLE HISTORY

 TEMPLE HISTORY
During the marriage celebrations of Lord Shiva with Sri Umadevi, all the Devars, saints, Rishis and Munis assembled at Mount Kailash. Due to this the north lowered and south part of this earth raised up. So Lord Shiva sent Sri Agasthiyar to the south to balance this earth. Sri Agasthiyar created lot of Shiva temples & worshiped during his stay and spread Lord Shiva’s glories. One such temple is this Padiri Shiva temple.

This temple is situated at Padiri Village, in Kanchipuram Dist on the way between Melmaruvathur to Vandavasi,  Thondai  Mandalam. The Ramapuram a big Village is near by. Lord Shiva is here with Sri Kamatchi wearing the padiri flower garland.

The main profession of this village is agriculture and weaving and the people are ardent devotees  of lord Shiva. Lord Shiva here has the power of attraction and blesses his devotees. Ambal is in a standing posture with a smiling face. The temple has the sannadhis for Sri Ganapathy, Sri Vallidevasena Sri Shanmugar sitting on a peacock, which faces north, is unusual. Also has the sannadhis for Bairavar and Suryan.

Thiruporur Chidambaram Swamikal used to worship lord Shiva with Virudhachalam Guru Sri Kumaradevar. During one of the pooja time a peacock was appeared. When asked the meaning of this to his Guru and he  replied that he has to get the answer only from Madurai Sri Meenakshi. After 48 days thabas, Sri Meeakshi Amman appeared and told that his birth's purpose is to reconstruct the Mugugan temple of Thiruporur. Then  he started towards Thiruporur.

On the way he stayed at Mailam Murugan Temple and this Padiri Village. He worshiped Lord Shiva of Padiri to complete his mission. During his stay at Padiri, he gave the explanation to the Thiruvasakam, Thirusathakam section-8 anathathu to Sri Ganambigai. Pleased by the explanation she gave one varagan. Sri Chidambaram Swamikal used this one varagan  as a first money for the reconstruction of Sri Murugan Temple of Thiruporur.

Hearing all the miracles of Lord Shiva, Devotees started doing poojas at the feet of Lord Shiva after reading the Thiuvasakam Ananthathu portion. Lord Shiva answered all the devotees full heart  prayers with tears from their eyes.

ஸ்தல வரலாறு.
ஸ்ரீ கைலாயத்தில், ஸ்ரீ கைலாச நாதருக்கும் உமா தேவிக்கும் திருக்கல்யாண நிகழ்வு நடக்கையில், ஸ்ரீ கைலாசநாதர் அகத்திய மகரிஷியைய்ப் பார்த்து தெற்கே சென்று சிவவழிபாடு செய்யும்படி ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். ஆகத்திய மகரிஷியும் திராவிட தேசம் வந்து இங்கே பல சிவாலயங்களை நிறுவி சிவ வழிபாடு செய்து சில வழிபாட்டின் சிறப்பை உலகம் அறிய செய்தார். அதன் பின்னர் வந்த பல ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் பல சிவ ஆலயங்களை அமைத்து சிவனை மைய்யமாகக் கொண்டு சீரும் சிறப்புமாக பெருவாழ்வு வாழ்ந்தார்கள். அவ்வாறு தோன்றிய பல சிவ ஆலயங்களில் ஒன்று தான் இந்த பாதிரி சிவஸ்தலம்.

தொண்டை மண்டலத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் மெல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் இராமபுரம் அருகில் பாதிரி மரங்களால் சூழப்பட்டு, பாதிரிப்பூக்களைப் பரவசமாக சூடிக்கொண்டு பரம்பொருளாக வீற்றிருக்கும் ஸ்ரீ காமட்சி உடனுறை ஸ்ரீ கைலாசநாதரின் புண்ணிய க்ஷேத்திரம்தான் பாதிரி.

சிவ சிந்தை நிறைந்த உழவு மற்றும் நெசவுத் தொழில் புரியும் சிவநேச செல்வர்கள் நிறைந்த ஊராக இவ்வூர் இருந்து வந்துள்ளது. ஸ்ரீ கைலாசநாதர், பார்ப்போரை ஈர்க்கும் வண்ணம் கருனைக்கடலாக இருந்து பேரருள் பாலிக்கின்றார். நித்தமும் அருள் புரிந்து நிம்மதியை தருவதற்க்காக கடைக்கண் பார்வையோடும், கருனை உள்ளத்தோடும், எங்கும் காணக்கிடைக்காத அருங்காட்சியாக ஸ்ரீ காமாட்சி அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றார். மேலும் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சண்முகர் வள்ளி தெய்வானை மற்றும் பல பரிவார தேவதைகளுடன் அமையப் பெற்றதே இப்பாதிரி சிவ ஸ்தலம்.

லிங்கத்தை வழிபட்டு வாழும் வீரசைவர் இனத்தை சேர்ந்த மகான் திருபோரூர் சிதம்பர சுவாமிகள் விருத்தாசலம் குமாரதேவரிடம் சிஷ்யராக சேர்ந்து பணியாற்றினார். பூசை செய்யும் தருவாயில் அவருக்கு மயில் தெரிந்தது. அதைப் பற்றி குமாரதேவரிடம் விண்ணப்பம் கேட்க, அவர் மதுரை மீனாட்சி அம்மனிடம் விளக்கம் கேள் என்றார். 48 நாட்கள் தவம் இருந்து பல சோதனைகளுக்குப் பின் தரிசனம் பெற்று இத்திசைக்கு வடபால் முப்பது யோசனைக்கு அப்பால் உள்ள குமரன் ஆலய சீர்திருத்தப் பணி செய்யப்பட வேண்டும் என்பதே உன் பிறப்பின் நோக்கம் என்று அருள் பாலித்தார்கள்.. அம்மனின் ஆணையினை சிரமேற்க்கொண்டு சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் நோக்கி பயணம் செய்தார்.

மயிலம் முருகன் ஆலயத்தில் தங்கிப் புறப்பட்டு வரும்போது பாதிரி கிராமத்தில் சிவ சிந்தனை நிறைந்த ஞானாம்பிகை அம்மாள் வீட்டில் தங்கினார்கள். .தான் எடுத்த பணி செவ்வனே முடிய வேண்டும் என்பதற்க்காக அங்குள்ள ஸ்ரீ கைலாசநாதரை வழிபட்டு வந்துள்ளார்கள். திருவாசகத்தில் உள்ள திருச்சதகம் பிரிவு -8 ஆனந்தத்து அழுங்கல் என்ற அதிகாரத்தில் வரும் புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் என்ற பாடல்களுக்கு ஞானாம்பிகை அம்மாள் விளக்கம் கேட்க சுவாமிகளும் விளக்கவுரை அளித்து அப்பாடலையே கைலாசநாதரிடம் பாடிப் பிராத்தித்தார்கள். சில காலத்திற்க்குப் பிறகு ஞானாம்பிகை அம்மாளிடம் ஆலயத்திருப்பணிக்காக ஹரி ஓம் என்ற முதல் முதலாக ஒரு வராகன் காசுகள் பெற்று திருப்போரூர் சென்று திருப்பணி முடித்தார். திரு கந்தனின் அருள்பாலிக்கப் பெற்றார்கள்.

இப்பெருமையையும் சூட்சுமத்தையும் அறிந்து அன்பர்கள் ஒவ்வொறு நற்காரியம் செய்யும் முன்னும்  ஸ்ரீ கைலாசநாதரின் திருப்பாதத்தில் தன பூசை செய்து திருவாசகத்திற்க்கு உருகார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் என்ற பெருமைக்கு ஏற்ப திருவாசகத்தில் உள்ள ஆனந்தத்து அழுங்கல் பாடி வழிபட்டு புனித காரியங்கள் ஆரம்பித்து செவ்வனே செய்து முடிக்கின்றார்கள். பல அன்பர்கள் தங்கள் கவலைகள் பலவற்றையும் ஸ்ரீ கைலாசநாதரிடம் சொல்லி கண்ணீர் சிந்தி வழிபட்டு கவலைகள் நீங்கி பெருவாழ்வு வாழ்கின்றார்கள்.
  
சுபம்..
ஓம் நமசிவாய